கிணற்றில் மூதாட்டி பிணம்


கிணற்றில் மூதாட்டி பிணம்
x

ஆம்பூர் அருகே கிணற்றில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த கரும்பூர் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்பு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கிணற்றில் மூதாட்டி ஒருவர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இருந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த கோபால் மனைவி ருக்கம்மாள் (வயது 75) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story