புளியங்குடி அருகே டிராக்டர் மீது மொபட் மோதி முதியவர் பலி -அக்காள் படுகாயம்

புளியங்குடி அருகே, டிராக்டர் மீது மொபட் மோதியதில் முதியவர் பலியானார். அவருடைய அக்காள் படுகாயம் அடைந்தார்
புளியங்குடி:
புளியங்குடி அருகே, டிராக்டர் மீது மொபட் மோதியதில் முதியவர் பலியானார். அவருடைய அக்காள் படுகாயம் அடைந்தார்.
தொழிலாளி
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள மருதநாச்சியார்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 60). தொழிலாளி. இவருடைய அக்காள் பெருமாளம்மாள் (65).
நேற்று முன்தினம் இரவு முருகனும், அவரது அக்காள் பெருமாளம்மாளும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டில் புளியங்குடி வந்தனர்.
புளியங்குடி நவ்வா சாலை அருகே சென்றபோது முருகன் மொபட்டிற்கு முன்னால் விரகு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் சென்று கொண்டிருந்தது.
டிராக்டர் மீது மோதியது
இரவில் டிராக்டரின் பின்பக்க விளக்கு எரியவில்லை. இதனால் டிராக்டர் பின்பக்கத்தில் முருகன் ஓட்டிச்சென்ற மொபட் மோதியதாக கூறப்படுகிறது இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
உடன் சென்ற அவரது அக்காள் பெருமாளம்மாள் பலத்த காயமடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.