கழுகுமலையில் காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்த நாள் விழா

கழுகுமலையில் காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கழுகுமலை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட துணை தலைவர் கந்தசாமி மற்றும் நகர தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், நகர செயலாளர் மரியதங்கராஜ் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நேருவின் உருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொருளாளர் ஜான்வின்சென்ட் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதில் காங்கிரஸ் வட்டார துணை தலைவர் செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கருப்பசாமி, கெச்சிலாபுரம் காங்கிரஸ் கட்சி சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story