தேசிய ரத்தநாள தினத்தையொட்டி நடைபயண போட்டி


தேசிய ரத்தநாள தினத்தையொட்டி  நடைபயண போட்டி
x

தேசிய ரத்தநாள தினத்தையொட்டி நடைபயண போட்டி நடைபெற்றது.

மதுரை


நாடு முழுவதும் ஆகஸ்டு 6-ந்தேதி தேசிய ரத்த நாள தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை அரசு மருத்துவக்கல்லூரி, அரசு ஆஸ்பத்திரி மற்றும் இந்திய ரத்த நாள அமைப்பு ஆகியவற்றின் சார்பில் "உடலுறுப்பு நீக்கம் இல்லா இந்தியா" என்னும் உறுதிமொழியுடன் நடைபயண போட்டி (வாக்கத்தான்) நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவில் அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் கலந்து கொண்டு வாக்கத்தான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் துணை மருத்துவ மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக அரசு மருத்துவமனை ரத்த நாள துறைத்தலைவரும், இந்திய ரத்த நாள அமைப்பின் மதுரையின் முதன்மை அமைப்பாளருமான டாக்டர் சரவணன் ராபின்சன் கூறும்போது, விரிவான உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்த நாளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், உடலுறுப்பு நீக்கம் இல்லாத இந்தியா என்னும் இலக்கை எட்டும் வகையில் ஆரோக்கிய சமூகங்களை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு தேசிய ரத்த நாள தினத்தையொட்டி இந்தியா முழுவதும் 26 நகரங்களில் ஒரே நேரத்தில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரையிலும் நடைபெற்றுள்ளது என்றார்.


Next Story