உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் மோதிரம் வழங்கினார்.
தூத்துக்குடியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த 19 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தங்க மோதிரம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி 19 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் ஹார்லிக்ஸ் வழங்கினார். இதே போன்று பழைய பஸ் நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.