தூத்துக்குடி கல்லூரியில் பெண்கள் தினத்தை முன்னிட்டுசிறப்பு சொற்பொழிவு

தூத்துக்குடி கல்லூரியில் பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மகளிர் ஆலோசனை குழுமம் சார்பில் தேசிய பெண்கள் தினத்தை முன்னிட்டு, கால சூழலில் பெண்கள் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஏ.பி.சி.வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுந்தரி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரம் கல்லூரி மகளிர் ஆலோசனைக் குழும பொறுப்பு உறுப்பினர்கள் அமுதவள்ளி, கிருஷ்ணவேணி, மெர்சிலதா, ராதிகா மற்றும் பேராசிரியை காலெட் சர்மிளா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story