ஆன்லைன் பதிவு கட்டாயம்


ஆன்லைன் பதிவு கட்டாயம்
x
திருப்பூர்


விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் திட்டத்தில் ஆன்லைன் பதிவு மூலம் ஆதார் விவரம் புதுப்பிக்காத விவசாயிகளுக்கு நிதி உதவி நிறுத்தப்படும் என்று வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடும்ப அட்டைக்கு ஒருவர்

இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:-

பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பெயரில் நேரடி நிலம் உள்ள சிறு குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. பயிர் சாகுபடிக்குத் தேவையான இடு பொருட்களை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்து பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பண்ணை வருவாயை உயர்த்திடும் வகையில் இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற குடும்ப அட்டை உள்ள ஒரு விவசாய குடும்பம் அலகாக எடுத்துக் கொள்ளப்படும். ஒரு குடும்ப அட்டையில் ஒருவர் மட்டுமே பயன்பெற முடியும். மேலும் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ம் தேதிப்படி வருவாய் கணக்கு சிட்டாவில் நில உரிமை பெற்றுள்ள நபர்களே இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ளவர்கள் ஆவார்கள். மேலும் 1-2 -2019 அன்றைய தேதியில் நில உரிமையாளர் இறந்துவிடும் பட்சத்தில் வாரிசுதாரர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

11 தவணை

மடத்துக்குளம் வட்டாரத்தில் இதுவரை 5,100 விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இதுவரை 11 தவணை ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த ஊக்கத் தொகையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு மட்டுமே விடுவிக்கப்பட உள்ளது. எனவே தொடர்ந்து ஊக்கத் தொகையினை பெற்றிட விவசாயிகள் தங்களின் ஆதார் விவரத்தினை சரி பார்த்து இகேஒய்சி (EKYC) யில் பதிவு செய்து பதிவை வருகின்ற 15-ந்தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.

இதனை www.pmkisan.gov.in என்ற வலைதளத்தில் சென்று ஆதார் எண் உள்ளீடு செய்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணையும் EKYC ல் உள்ளீடு செய்து ஆதார் விவரத்தையும் உறுதி செய்யலாம். இவ்வாறு புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை பெற முடியும். எனவே மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் இதனை புதுப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு தங்கள் கிராம உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அ


Next Story