ஊட்டி கென்ட்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி


ஊட்டி கென்ட்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி
x

மாவட்ட அளவிலான கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், ஊட்டி கென்ட்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நேற்று 2-வது அரையிறுதி போட்டியில் ஊட்டி கென்ட்ஸ் அணி, ஊட்டி புளூ மவுண்டன் வாரியர்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஊட்டி கென்ட்ஸ் அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் எடுத்தது. அந்த அணியை சேர்ந்த மல்லிகாந்த் 65 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். அருள் 52 ரன்கள், மணி 47 ரன்கள் எடுத்தனர். புளூ மவுண்டன் வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சாளர் முகமது சன்ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய புளூ மவுண்டன் வாரியர்ஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணி வீரர் பிரதீப் 40 ரன்கள், சரவணன் 26 ரன்கள் எடுத்தனர். ஊட்டி கென்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளர் திமோத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஊட்டி கென்ட்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதுடன், அப்போட்டியில் குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணியுடன் மோத உள்ளது.



Next Story