ஓட்டல் உட்லண்ட்ஸ் திறப்பு விழா


ஓட்டல் உட்லண்ட்ஸ் திறப்பு விழா
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் ஓட்டல் உட்லண்ட்ஸ் திறப்பு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் கள்ளக்குறிச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயனின் வழிகாட்டுதல்படி ஓட்டல் உட்லண்ட்ஸ் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஓட்டல் உரிமையாளர் பி.எஸ்.கருணாநிதி தலைமை தாங்கினார். ஏ.எம்.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்புராயலு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இது குறித்து ஓட்டல் உரிமையாளர் பி.எஸ்.கருணாநிதி கூறுகையில், எங்கள் ஓட்டலில் குளிர்சாதன வசதியுடன் சைவம் அசைவம் அனைத்து வகையான உணவுகளும் உள்ளது. செட்டிநாடு உணவு வகைகள், சைனீஸ், தந்தூரி, சவுத் இந்தியன், நார்த் இந்தியன் போன்ற உணவு வகைகள் மற்றும் பல வகையான பிரியாணி வகைகள் சிறந்த முறையில் செய்து விற்பனை செய்கிறோம். மேலும் வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் தரமான முறையில் உணவு செய்து கொடுப்போம். திறப்பு விழா சலுகையாக வருகிற 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை 2 சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்குகிறோம் என்றனர்.


Next Story