அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக தகவல் மையம் திறப்பு

அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக தகவல் மையம் திறப்பு
களியக்காவிளை:
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் வழிகாட்டி நெறிமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக இந்து சமய அறநிலைய துறை சார்பில் களியக்காவிளை ஒற்றாமரம் பகுதியில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை, இணையதள பெயர் பதிவு, பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் எடுத்துச் செல்வதற்கு தடை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பது போன்ற நெறிமுறைகளை கடைபிடிப்பது மற்றும் சந்தேகங்கள் விளக்கி கூறப்படும். இதற்காக இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள் இங்கு பணியில் இருப்பார்கள். மேலும் குழித்துறை இந்து சமய அறநிலைய துறை நிர்வாகி மோகன் குமார், அறநிலையத்துறை துறை பணியாளர் மோகன் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்றும், கூடுதல் தகவல்களுக்கு 9442577047, 9486270445 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.