உளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் கவிழ்ந்த சிமெண்டு கலவை எந்திரம் கண் இமைக்கும் நேரத்தில் கீழே குதித்து உயிர் தப்பிய டிரைவர்

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் கவிழ்ந்த சிமெண்டு கலவை எந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மலைஅடி குன்னத்தூர் கிராமத்தில் இருந்து கிளியூர் கிராமம் வரை சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 2 சிமெண்டு கலவை எந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலை குன்னத்தூர் கிராமத்தில் சாலையோரம் கலவை எந்திரம் நிறுத்தப்பட்டு, சிமெண்டு கான்கிரீட் கலவை போடப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக கலவை எந்திரம் கால்வாய் போடுவதற்காக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதற்கு முன்னதாக கலவை எந்திரத்தின் டிரைவர் கண் இமைக்கும் நேரத்தில் எகிறி கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.