நடைபாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது


நடைபாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது
x

நடைபாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகரம் லால்பகதூர் நகரில் பூம்புகார் சாலை மற்றும் தருமபுரம் சாலையை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1965-ம் ஆண்டு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் 'ஒரு தலைராகம்' திரைப்படத்தில் வரும் 'இது குழந்தை பாடும் தாலாட்டு" திரைப்பாடல் படமாக்கப்பட்ட நடைபாலமாகும். பழமையான இந்த பாலத்தை மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரி, தருமபுரம் கலைக்கல்லூரி, ஏ.வி.சி. கல்லூரி மற்றும் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்து சேதமடைந்தது. எனவே நடைபாலத்தின் சேதமடைந்த பகுதியை உடனடியாக சீரமைத்து, புதுப்பித்துத்தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story