பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்
பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்
ஊட்டி
ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தலைகுந்தா பகுதி உள்ளது. அந்த வழியாக கூடலூர், மசினகுடி, ஏக்குணி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் செல்கிறது. அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் மழைக்கு ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல், நனையும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக சாலையோரம் பயணிகள் குடைகளை பிடித்தபடி வெகு நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து தலைகுந்தா பகுதி பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் மனு அளித்து உள்ளனர். அந்த மனுவில், தலைகுந்தாவில் இருந்து கூடலூர், ஊட்டி, நடுவட்டம், மசினகுடி செல்லும் பயணிகள், நிழற்குடை இல்லாததால் மழையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. தினமும் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் பஸ்களில் சென்று வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.