அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்


அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாங்கூர் கோவில் திருவிழா தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூர் மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சுற்றியுள்ள 12 சிவபெருமான் கோவில்களில் இருந்து சிவபெருமான்கள் அம்பிகைகளுடன் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தரும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. விழா நடத்திட நாங்கூர் கிராமத்தில் இரு தரப்பினர் அனுமதி கோரினர். இதனால் விழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் ரஜினி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் முருகன், திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். அப்போது இரு தரப்பும் இணைந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதுமின்றி விழாவினை நடத்திட ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.


Next Story