விவசாயி தோட்டத்தில் விளைந்த வினோத வடிவ கிழங்கு


விவசாயி தோட்டத்தில் விளைந்த வினோத வடிவ கிழங்கு
x

விவசாயி தோட்டத்தில் விளைந்த வினோத வடிவ கிழங்கு பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம் மெயின் ரோட்டில் வசிப்பவர் சார்ஜன் (வயது60). விவசாயி. இவருடைய மனைவி ஏசுராணி. இவர்களுடைய வீட்டு தோட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காவளி கிழங்கு விதை புதைத்துள்ளார். தற்ேபாது விளைந்துள்ள அந்த கிழங்கை நேற்று வெட்டி எடுத்தபோது அது வினோத வடிவில் இருந்தது. அது பல விரல்களை கொண்ட மனித கை போல தோற்றம் அளித்தது. இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


Next Story