தூய்மை இயக்க மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


தூய்மை இயக்க மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

தூய்மை இயக்க மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சையில் தூய்மை இயக்க மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழகத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தஞ்சை மாநகராட்சி சார்பிலும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டு எனது குப்பை, எனது கடமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று தஞ்சை மாநகராட்சி சார்பில் தூய்மை இயக்க மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. தஞ்சை புதிய பஸ்நிலையத்தில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

குப்பைகளை சேகரித்தனர்

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், டாக்டர் ராதிகா மைக்கேல், சமூக ஆர்வலர் முத்துக்குமார் மற்றும் பலர் மாணவர்களிடம் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

பின்னர் கல்லூரி மாணவ -மாணவிகள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மணிமண்டபம் வரை 3 பிரிவாக பிரிந்து ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் செல்லும் வழியில் கிடந்த குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர். இதேபோல் பொதுமக்களும், வணிகர்களும் நமது குப்பையை நாமே அகற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதில் வேளாண் கல்லூரி முதல்வர், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story