ஆங்கில புத்தாண்டையொட்டி திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரண்டனர். வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரண்டனர். வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தளி
ஆங்கில புத்தாண்டையொட்டி திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரண்டனர். வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருமூர்த்தி மலை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னியர் மற்றும் நவகிரக சன்னதிகளும் உள்ளன. அமணலிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி கோவிலுக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்திஅணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவற்றை பார்வையிடவும் அணைப்பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் மலைமீதுள்ள பஞ்சலிங்க அருவியில் விடுகின்ற தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்கும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் உடுமலை பகுதியில் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது.
சாமி தரிசனம்
இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி அமண லிங்கேஸ்வரர் கோவிலில் மும்மூர்த்திகள், விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்கள், சப்தகன்னியருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.அதில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வாகனங்களில் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தனர்.சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பின்னர் அனைவரும் அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்ததுடன் குடும்பத்தோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதையடுத்து அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு மும்மூர்த்திகள் உள்ளிட்ட அனைத்து கடவுள்களையும் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து அணைப் பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு அமர்ந்து ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
மக்கள் கூட்டம்
இதனால் அணைப்பகுதி, பஞ்சலிங்க அருவி மற்றும் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டமும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. அதை சீரமைப்பதற்கு போலீசார் முன்வராததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள். மேலும் வாகன நெருக்கடி காரணமாக அரசு பஸ்களில் கோவிலுக்கு வருகை தந்த பொதுமக்கள் 2 கிலோமீட்டர் முன்பாக இறக்கி விடப்பட்டனர். இதனால் குழந்தைகள் பெரியோர்கள் வெயிலில் தாக்கத்தால் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதேபோன்று அமராவதி அணைப்பகுதி முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.