மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர்,

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 351 மனுக்களை பெற்றார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 2 பேருக்கு திறன்பேசி, 5 பேருக்கு தையல் எந்திரம், ஒருவருக்கு எல்போ ஊன்றுகோல், ஒருவருக்கு மடக்கு சக்கர நாற்காலி, 3 பேருக்கு மூன்று சக்கர வண்டி, 10 பேருக்கு தேசிய அடையாள அட்டை, கண்பார்வையற்ற ஒருவருக்கு பிரய்லி ரீடர் மற்றும் பிரய்லி கடிகாரமும் வழங்கப்பட்டன.மேலும் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சம் வங்கி கடன்களும், வருவாய்த்துறை மூலம் 5 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணையும் என 34 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

சமையலர்களுக்கு பரிசு

மேலும் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் 6 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு மாவட்ட அளவில் சமையல் போட்டி நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 6 பேருக்கு தலா முதல் பரிசு ரூ.2 ஆயிரத்து 500-ம், இரண்டாம் பரிசு ரூ.1,500-ம், மூன்றாம் பரிசு ரூ.1,000-ம் வழங்கப்பட்டது.


Next Story