மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கரூ.5 கோடி கடனுதவி


மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கரூ.5 கோடி கடனுதவி
x
தினத்தந்தி 20 Jan 2023 12:30 AM IST (Updated: 20 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க ரூ.5 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன்

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் இதுவரை 40 ஆயிரத்து 109 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 7 ஆயிரத்து 14 பேருக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதுதவிர 12 ஆயிரம் பேருக்கு உபகரணங்கள், மேலும் மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக முன்னேற கடன் வழங்கப்படுகிறது. இதில் கடந்த 2021-2022-ம் ஆண்டு 370 பேருக்கு ஆடு, மாடுகள் வளர்ப்பதற்கு ரூ.98 லட்சத்து 52 ஆயிரமும், 168 பேருக்கு பெட்டிக்கடை வைப்பதற்கு ரூ.67 லட்சத்து 20 ஆயிரமும், 158 பேருக்கு சிறுதொழில் தொடங்குவதற்கு ரூ.73 லட்சத்து 10 ஆயிரமும், தையல் தொழில் செய்வதற்கு 91 பேருக்கு ரூ.45 லட்சத்து 50 ஆயிரமும் என மொத்தம் 787 பேருக்கு ரூ.2 கோடியே 84 லட்சத்து 32 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது.

பாராட்டு சான்றிதழ்

இதேபோல் 2022-2023-ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வரை ஆடு, மாடு வளர்க்க 258 பேருக்கு ரூ.1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரமும், பெட்டிக்கடை வைப்பதற்கு 118 பேருக்கு ரூ.45 லட்சத்து 1,000-ம், பால் வியாபாரம், பழக்கடை உள்ளிட்ட சிறுதொழில் செய்வதற்கு 92 பேருக்கு ரூ.43 லட்சத்து 14 ஆயிரமும், தையல் தொழில் செய்வதற்கு 27 பேருக்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரமும் என மொத்தம் 495 பேருக்கு ரூ.2 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. இதற்காக சுதந்திர தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்துக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story