குடியாத்தம் நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி


குடியாத்தம் நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

குடியாத்தம் நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வேலூர்

குடியாத்தம் நகராட்சி சார்பில் காட்பாடி ரோடு பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். நகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் பென்னி, சிவக்குமார் சதீஷ்குமார், சாமுண்டீஸ்வரி, சிகாமணி, ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பாரத ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''மாணவர்களுக்கு சிறு வயது முதலேயும், பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே வீடுகள் மற்றும் பொது இடங்கள், பள்ளிகளில் குப்பைகளை சேர்க்காமல் பார்த்துக் கொள்வது குறித்தும், தான் உபயோகிக்கும் பொருட்களை பொது இடங்களில் வீசுவதை தவிர்த்து அதற்கான குப்பை தொட்டியில் போடுவது குறித்தும் அப்பழக்கம் தொடர்ந்து வரவேண்டும் எனவும். குடியாத்தம் நகரை தூய்மையான நகராக மாற்ற மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அதேபோல் மாணவர்கள் தங்கள் வீடுகளிலும் முழு தூய்மையாக வைத்துக் கொண்டு என் குப்பை என் பொறுப்பு என நடக்க வேண்டும்'' என அறிவுறுத்தினார்.

மாணவர்கள் அதற்கான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துப்புரவு மேற்பார்வையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story