2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி: 3-வது வழித்தடத்திற்கு அனுமதி வழங்க ஒப்புதல்

கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி வழங்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயிலின் 2ம் கட்ட திட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணியில் 3-வது வழித்தடத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி வழங்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.
இதில் 3 வழித்தடம் என்பது மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 45.8 கி.மீ. வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட உள்ளது.
மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கவும், பக்கிங்காம் கால்வாயிலும் மெட்ரோ சுரங்கப் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story