அனைத்து கிராமங்களிலும் பா.ம.க. கொடியேற்ற வேண்டும்


அனைத்து கிராமங்களிலும் பா.ம.க. கொடியேற்ற வேண்டும்
x

அனைத்து கிராமங்களிலும் பா.ம.க. கொடியேற்ற வேண்டும் என்றுஎருமாபாளையத்தில் நடந்த வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம்

சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நேற்று எருமாபாளையத்தில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் விஜயராசா தலைமை தாங்கினார். தலைவர் முருகேசன் வரவேற்றார். ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர்கள் பழனிசாமி, மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஒன்றிய, பேரூராட்சிகளில் வாக்குச்சாவடி கள பணியாளர்கள் பட்டியலை வருகிற 20-ந் தேதிக்குள் கட்சி தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் பா.ம.க. கட்சி கொடியேற்ற வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முதல்-அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தலைவர் ஆகியோருக்கு ஒரு கோடி கடிதம் அனுப்பி வைக்க வேண்டும். தமிழைத்தேடி இயக்கத்திற்கு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட ஒருங்கிணைந்த வன்னியர் சங்க செயலாளர் குணசேகரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாராயணன், மாவட்ட அமைப்பு தலைவர் ராஜமூர்த்தி, செயலாளர் செல்வம், வன்னியர் சங்க தலைவர் சிவசங்கரன், மாணவர் சங்க செயலாளர் குமார், துணை தலைவர்கள் பாஸ்கர், அசோக்குமார், துணை செயலாளர்கள் லட்சுமணன், ரத்தினவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story