சிறுமியை கர்ப்பமாக்கிய பிளஸ்-1 மாணவன் மீது 'போக்சோ' வழக்கு


சிறுமியை கர்ப்பமாக்கிய பிளஸ்-1 மாணவன் மீது போக்சோ வழக்கு
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய பிளஸ்-1 மாணவன் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய பிளஸ்-1 மாணவன் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிளஸ்-1 மாணவன்

மயிலாடுதுறையை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் மெட்ரிக் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவல்லி மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நெருங்கி பழகியதில் கர்ப்பம்

விசாரணையில் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவரும் 17 வயது மாணவன் தூரத்து உறவினர் என்ற அடிப்படையில் சிறுமியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது அவரது வீட்டிற்கு சென்று ஆசைவார்த்தைகளை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது.

போக்சோ வழக்கு

இதனையடுத்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 17 வயது மாணவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story