ஓசூரில், மசாஜ் சென்டர் பெயரில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

ஓசூரில் மசாஜ் சென்டர் பெயரில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
விபசாரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் வெளிவட்ட சாலை பகுதியில் ஸ்பா சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மசாஜ், ஸ்பா என்ற பெயரில், இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்கு அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் அந்த ஸ்பா சென்டரில், இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
பெண் கைது
இதையடுத்து அந்த ஸ்பா சென்டரை நடத்தி வந்த கர்நாடக மாநிலம் குடகுமாவட்டம் மடிகேரி பகுதியை சேர்ந்த ஜானகி (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story