பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி


பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி
x

பண்ருட்டி அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து போலீஸ்காரர் உயிரிழந்தார்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 31). இவருடைய மனைவி தேவி(30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

போலீஸ்காரரான சதீஷ்குமார், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டனர். அதன்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டா் வள்ளி மற்றும் போலீசாரை சதீஷ்குமார் போலீஸ் ஜீப்பில் ஏற்றி சென்றார்.

பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்

பின்னர் மாளிகைமேடு கிராமத்தில் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசாரை இறக்கி விட்ட சதீஷ்குமார், ஜீப்பை திருப்புவதற்காக சிறிது தூரம் சென்றார். அப்போது திடீரென சாலையோர பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. இதைபார்த்த சக போலீசார் விரைந்து வந்து பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்பை மீட்டு பார்த்தனர். அப்போது போலீஸ்காரர் சதீஷ்குமார், இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

போலீசார் அஞ்சலி

இதையடுத்து சதீஷ்குமாரின் உடல் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சொந்த ஊரான ராயர்பாளையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து போலீஸ்காரர் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story