தர்மபுரி பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
தர்மபுரி:
தர்மபுரி பகுதியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
தர்மபுரி நகராட்சி
தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. மாதர் சங்கம் அருகில் உள்ள ரேஷன் கடையில் நடைபெற்ற விழாவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரூ.1,000 ரொக்கம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் லட்சுமி, நகர செயலாளர் நாட்டான் மாது, நகராட்சி கவுன்சிலர்கள் முல்லைவேந்தன், பாலசுப்ரமணியன், சுருளிராஜன், ராஜா, தி.மு.க. நிர்வாகிகள் கோமலவள்ளி ரவி, கனகராஜ், அழகுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நகராட்சி தலைவர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
செம்மாண்டகுப்பம், மூக்கனூர் ஊராட்சி
தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி குண்டலபட்டியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி தலைவர் பானு பூமணி தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் இடும்பன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சி ஒட்டப்பட்டியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி மோகன் தலைமை தாங்கி, குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் கிராம நிர்வாக அலுவலர் சாக்கப்பன், தொடக்க வேளாண்மை செயலாளர் சான்பாஷா, ஊராட்சி செயலாளர் வெங்கட்ரமணி, ஊராட்சி துணைத் தலைவர் கார்த்திகா சின்னசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், சங்க இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி
தித்தியோப்பன அள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சபரிநாதன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். இதில் பாப்பாரப்பட்டி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும், நகர தி.மு.க. செயலாளருமான சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரபு, தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிட்டனஅள்ளி ரேஷன் கடையில் ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா முருகன் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பெரியண்ணன், தி.மு.க. நிர்வாகிகள் மணிகண்டன், முருகன், ஊர் தலைவர் தங்கராஜ், உமாராணி விஜயன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் துரைராஜ், பணியாளர்கள் அக்குமாரி, கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பிக்கிலி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சபரிநாதன் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.