உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி


உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி
x

கொடைக்கானலில், உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் தாலுகா பள்ளங்கி, வில்பட்டி, செண்பகனூர், பூம்பாறை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. பயிரிட்ட 90 நாட்களில் மகசூல் கிடைக்கும் என்பதால் உருளைக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் உருளைக்கிழங்குகள் கொடைரோடு, மதுரை, கோவை, மேட்டுப்பாளையம், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது கொைடைக்கானல் பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை பணி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பனி, வெயில் என சீதோஷ்ண நிலை மாறி கொண்டே இருந்ததால் விளைச்சல் குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. பராமரிப்பு செலவு, எடுப்பு கூலி, வாகன வாடகை என கணக்கிட்டால் இந்த விலை கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே உருளைக்கிழங்கு பயிரிட்டு நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டும். மேலும் கொடைக்கானலில் குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story