சிங்கம்புணரியில் இன்று மின்தடை


சிங்கம்புணரியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி மற்றும் அ.காளாப்பூர் துணை மின் நிலையங்களில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் சிங்கம்புணரி நகர், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, கண்ணமங்கலபட்டி, கோட்டை வேங்கைபட்டி, செருதப்பட்டி, என்பில்டு, எஸ்.வி. மங்களம், அ.காளாப்பூர், பிரான்மலை, வேங்கைபட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் செல்வத்துரை தெரிவித்துள்ளார்.


Next Story