வேப்பூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்


வேப்பூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி கோட்டத்துக்குட்பட்ட வேப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்(செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோ.மங்கலம், மேமாத்தூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் வேப்பூர், கழுதூர், நெசலூர், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா.கொத்தனூர், சேப்பாக்கம், நல்லூர், சித்தூர், நகர், வன்னாத்தூர், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்களம், கொடுக்கூர், பெரம்பலூர், கோமங்கலம், மணவாளநல்லூர், மணலூர், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என இவ்வாறு திட்டக்குடி மின் வாரிய செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story