இடையப்பட்டியில் நாளை மின்தடை


இடையப்பட்டியில் நாளை மின்தடை
x

மதுரை நாட்டார்மங்கலம் துணை மின்நிலைய பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படுகிறது

மதுரை

மதுரை நாட்டார்மங்கலம் துணை மின்நிலைய பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், அந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும், நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையப்பட்டி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின்செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.


Next Story