கறம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கறம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாளை மின்தடை
கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கறம்பக்குடி நகர், தீத்தான் விடுதி, குழந்திரான்பட்டு, ராங்கியன்விடுதி, பிலாவிடுதி, மயிலன்கோன்பட்டி, அம்புக்கோவில், மருதன்கோன் விடுதி, பந்துவக்கோட்டை, கே.கே.பட்டி, ரெகுநாதபுரம், முதலிப்பட்டி, கீராத்தூர், மங்களாகோவில், கிளாங்காடு, காடாம்பட்டி, செங்கமேடு, பல்லவராயன்பத்தை, திருமணஞ்சேரி, கருக்காக்குறிச்சி, குரும்பிவயல், நெடுவாசல், திருமுருகப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினிேயாகம் இருக்காது என்று கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை...
ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மனவிடுதி, சோத்துப்பாலை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், மட்டையன்பட்டி, மங்கலத்துப்பட்டி கந்தர்வகோட்டை, அக்கட்சிபட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுபட்டி, மெய்குடிபட்டி, ஆத்தியடிபட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.