கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும்

ஜாம்புவானோடையில் கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தில்லைவிளாகம்:
ஜாம்புவானோடையில் கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஜா புயல்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பல நாட்களாக மின்சாரம் இன்றி கிராமங்கள் இருளில் மூழ்கி கிடந்தன.இதை தொடர்ந்து சில இடங்களில் புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டது.
சேதமடைந்த மின்கம்பங்கள்
முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை காலனி சாலையில் இருந்த மின்கம்பங்கள் கஜா புயலில் சேதம் அடைந்தன. சில இடங்களில் வயர்கள் எல்லாம் அறுந்து விழுந்து கம்பம் மட்டுமே நிற்கின்றது. அந்த மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் தெரியும் அளவிற்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
அகற்ற வேண்டும்
இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், மின்கம்பங்கள் எப்போது சாய்ந்து விழுமோ? என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.