சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கோபி
கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள மரகதவல்லி சமேத மரகத ஈஸ்வரர் கோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி ஈஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன. மேலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலை சுற்றி பக்தர்கள் வலம் வந்தனர்.
இதேபோல் மொடச்சூர் சோமேஸ்வரர் கோவில், பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், கோபி விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரசாமி கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், பவளமலை கைலாதநாதர் கோவில், கோபி நஞ்சுண்டேஸ்வரர் கோவில், கூகலூரில் உள்ள மீனாட்சி அம்பிகா சனேந்த நஞ்சுண்டேஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீர நாராயண பெருமாள் கோவிலில் நந்தி பெருமானுக்கு 16 வகையான அபிஷேக திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல் மகுடேஸ்வரருக்கும் அபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் உமா மகேஸ்வரர் உள்பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில், பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவில், கொந்தளம் நாகேஸ்வரசாமி கோவிலிலும் மற்றும் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலில் இரட்டை நந்திக்கும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை காவிரி கரையில் அமைந்துள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் நந்திக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செசிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடுய்யப்பட்டது.
பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் நந்தியின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தை வலம் வந்தது.
விழாவில் அம்மாபேட்டை, குருவரெட்டியூர், சித்தார், பூனாச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி, தேவூர் எடப்பாடி, நெடுங்குளம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.