அவசர சிகிச்சை பிரிவு மூடப்படுவதை தடுக்க வேண்டும்


அவசர சிகிச்சை பிரிவு மூடப்படுவதை தடுக்க வேண்டும்
x

மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை பிரிவு மூடப்படுவதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வரும் அவசர சிகிச்சை பிரிவை மூட துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் அவசர சிகிச்சை பிரிவு மூடப்படுவதை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் ப.ச.சுரேஷ்குமார் தலைமையில் அனைத்து கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் மாதனூர் ஒன்றியத்தில் சுமார் 20 கி.மீ. தூரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்குபவர்கள் அவசர சிகிச்சைக்காகவும், சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாம்பு மற்றும் விஷ பூச்சிகளால் பாதிக்கப்படும் போதும் மாதனூரில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்கின்றனர். அதனால் அவசர சிகிச்சை பிரிவு மூடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story