காய்கறிகள் விலை குறைந்தது

கோவை எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கு விற்றது.
கோவை எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கு விற்றது.
காய்கறிகள் விலை குறைவு
கோவையில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டது. தக்காளி கிலோ ரூ.140, சின்ன வெங்காயம் ரூ.200, இஞ்சி ரூ.300-க்கு அதிகமாக விற்பனையானது.
அதுபோல் கேரட், கத்தரி, பீன்ஸ் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்து காணப்பட் டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டில் நேற்று காய்கறிகளின் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி தக்காளி மொத்த விலை கிலோ ரூ.80, சின்ன வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது.
விலை விவரம்
அதுபோல் இஞ்சி, கத்தரிக்காய், முட்டைகோஸ், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், முள்ளங்கி, பீட்ரூட், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலையும் குறைந்து உள்ளது.
எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை (ஒரு கிலோ) விவரம் வருமாறு:-
தக்காளி-ரூ.80, இஞ்சி (பழையது) - ரூ.180, புதியது-ரூ.110, முட்டைக்கோஸ்- ரூ.12, பச்சைமிளகாய்- ரூ.60, கத்தரி-ரூ.30, கேரட்-ரூ.40, பீன்ஸ்-ரூ.60, முள்ளங்கி-ரூ.10, பீட்ரூட்-ரூ.15, பெரிய வெங்காயம்-ரூ.15, முருங்கைக்காய்-ரூ.20, சின்ன வெங்காயம்-ரூ.80.
குறைய வாய்ப்பு
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் தற்போது ஆடி மாதம் என்பதால் விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது. இதுவே காய்கறி விலை குறைவுக்கு காரணம்.
இன்னும். ஓரிரு நாட்களில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலையும் குறைந்து விடும். ஆனால் மொத்த மார்க்கெட்டில் விற்பனை செய்யும் விலையில் இருந்து சில்லரை கடைகளில் ரூ.20 அதிகமாக விற்பனை செய்யப்படும் என்றார். : J.JOSEPH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore