பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட ஆலோசனை கூட்டம்


பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2023 1:51 AM IST (Updated: 28 Jun 2023 11:46 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட தொடங்குதல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி விவரம் குறித்து தெரிவிக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு நிதி 60 சதவீதம் என ரூ.72 ஆயிரமும், மாநில அரசு நிதி 40 சதவீதம் என ரூ.48 ஆயிரமும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 460 வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதில் மொத்தமாக மத்திய, மாநில அரசு மானியம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருட்களுக்கு ரூ.50 ஆயிரம், மாநில அரசு கூடுதல் நிதி ரூ.70 ஆயிரம், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் 90 நாட்கள் தினக்கூலி அடிப்படையில் தனிநபர் கழிப்பறை நிதி ரூ.12 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 460 ரூபாய் மொத்த நிதியாக வழங்கப்படுவதாக பொதுமக்களிடம் எடுத்து கூறப்பட்டது. கூட்டத்திற்கு உதவி திட்ட அலுவலர் ரவி தலைமை தாங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (ஊராட்சி) அமிர்தலிங்கம், (கிராமம்) விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், மாவட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வதம்பி, ஒன்றிய பொறியாளர் மலர்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story