பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேசிய மாணவர் படை சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு வெம்பக்கோட்டை தாசில்தார் ரங்கநாதன் தலைமை தாங்கி ெதாடங்கி வைத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராஜ். உதவி தலைமை ஆசிரியர் பரமசிவன், மூத்த ஆசிரியர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து போதை பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்தனர். இந்த பேரணியானது ஆலங்குளம் முக்கு ரோடு வரை சென்றது. தொடர்ந்து ஓவியம், பேச்சுப்போட்டி நடைபெற்றது.
இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கபட்டது. இதில் வெம்பக்கோட்டை தாலுகா மண்டல துணை தாசில்தார் ராஜ்மோகன், வருவாய் அலுவலர் அறிவழகன். கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ், கிராம உதவியாளர் ஜான் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.