கைப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு

அம்பையில் கைப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அம்பை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி, அம்பை கலைக்கல்லூரியில் 3 நாட்கள் நடந்தது. இதில் 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி வென்று முதலிடம் பிடித்தது. 2-வது இடத்தை அம்பை கலைக்கல்லூரி அணியும், 3-வது இடத்தை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அணியும், 4-வது இடத்தை பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரி அணியும் பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியை தீபலட்சுமி வரவேற்று பேசினார். அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன், கல்லூரி செயலாளர் தங்கபாண்டியன், ஆட்சிமன்ற குழு தலைவர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை, பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர். விழாவில் வெள்ளப்பாண்டியன், வக்கீல் கார்த்திக், நகராட்சி கவுன்சிலர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவகுமார் நன்றி கூறினார். உதவி பேராசிரியை தங்கசெல்வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.