ரூ.30 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்


ரூ.30 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி பகுதியில் ரூ.30 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

வேப்பனபள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திமுகம் ஊராட்சிக்குட்பட்ட பலவனபள்ளி கிராமத்தில் ரூ.12 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், பண்ணப்பள்ளி ஊராட்சிக்குப்பட்ட முதுகுறுக்கி கிராமத்தில் ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. மேலும் நெரிகம் ஊராட்சி கூள்ளு கிராமத்தில் ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், சின்னாரன்தொட்டி ஊராட்சி சின்னாரன்தொட்டி கிராமத்தில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. மொத்தம் ரூ.29 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான பாபு என்ற வெங்கடாசலம், ஒன்றிய அவைத்தலைவர் முனிசந்திரப்பா, கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.வி.எஸ்.மாதேஷ், அத்திமுகம் ஊராட்சி தலைவர் சுரேஷ் மற்றும் கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story