சொத்து வரி நிலுவை; திருமண மண்டபத்துக்கு குடிநீர் இணைப்பு

நெல்லையில் சொத்து வரி நிலுவை உள்ளதால் திருமண மண்டபத்துக்கு குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்
திருநெல்வேலி
நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட வணிக பயன்பாடு கட்டிடங்கள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி, தீவிர வரிவசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் அறிவுரையின்படி, நெல்லை மண்டல 16-வது வார்டு ஆசாத் ரோடு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சொத்து வரி நிலுவைக்காக குடிநீர் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது. மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் வடிவேல் முருகன், வருவாய் உதவியாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story