கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மறுபகிர்வு, அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். மின்வாரிய பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

600 பேர்

மின்சார மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மின்வாரிய என்ஜினீயர் அசோசியேசன் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், என்ஜினீயர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் துரை, என்ஜினீயர் ஐக்கிய சங்கத்தின் மாவட்ட தலைவர் கிரிதரன், அண்ணா தொழிற் சங்கத்தின் மாவட்ட தலைவர் நாகராஜ், அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் யூனியன் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம், சம்மேளனம் மாவட்ட தலைவர் ரங்கநாதன், எம்ளாயிஸ் பெடரேசன் மாநில செயலாளர் டேவிட், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகர், என்ஜினீயர்ஸ் யூனியன் மாவட்ட தலைவர் மாணிக்கம், என்.எல்.ஓ. மாவட்ட தலைவர் விஸ்வநாதன் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story