நாகை கலெக்டர் அலுவலகத்தை நியாயவிலைக்கடை பணியாளர்கள் முற்றுகை


நாகை கலெக்டர் அலுவலகத்தை நியாயவிலைக்கடை பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 May 2023 1:00 AM IST (Updated: 5 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய பொருட்களை பொட்டலமிட்டு வழங்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை நியாயவிலைக்கடை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

அத்தியாவசிய பொருட்களை பொட்டலமிட்டு வழங்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை நியாயவிலைக்கடை பணியாளர்கள் முற்றுகைநாகை கலெக்டர் அலுவலகத்தை நியாயவிலைக்கடை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டம்

பொது வினியோக திட்டத்துக்கு தனித்துறை அமைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில் பொட்டலமிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில பொருளாளர் பிரகாஷ் வரவேற்றார்.

30 பேர் கைது

போராட்டத்தின்போது கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தடையை மீறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக 5 பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story