டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

காளையார்கோவிலில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள், நாம்தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காளையார்கோவில்,
காளையார்கோவிலில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள், நாம்தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை
காளையார்கோவில் கே.கே. நகரில் 2 தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் குடியிருப்புகள், பொறியியல் கல்லூரி, தனியார் பள்ளி மற்றும் சர்ச் ஆகியவை உள்ளன.
இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறந்து இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்று கூறி பொதுமக்கள், நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் காளையார்கோவில் தாசில்தார் உமா மகேசுவரி, இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, சப் - இன்ஸ் பெக்டர் சரவணக்குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி தாலுகா அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.
முற்றுகைப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாறன், மாவட்ட செயலாளர் குகன் மூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.