கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x

கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

கரூர் சின்னாண்டாங்கோவில் பகுதியில் சேரன் நகர் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாக்கடை சரிவர தூர்வாரப்படாததால் சாக்கடை தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாததால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் புழுக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடையை தூர்வாரி உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story