மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் மாநில மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக கோவையில் இருந்து சென்னை செல்லும் ஜோதி திருப்பத்தூருக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மின்துறையை சேவை துறையாக மாற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தூய நெஞ்சக் கல்லூரி அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ஜோதி கலந்து கொண்டு மின் துறை பொது துறையாக சேவை துறையாக பாதுகாத்திட, மின்வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பக் கோரியும், மின்வாரியத்தில் தனியாரை ஈடுபடுத்த முயற்சி செய்வதை கைவிடக்கோரியும் பொதுமக்களிடம் விளக்கி பேசினார். அப்போது மின்துறையை சேவை துறையாக மாற்று, தனியார் மயமாக்காதே என கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் திட்ட செயலாளர் சந்திரசேகரன், திட்ட தலைவர் எஸ். தண்டபாணி, திட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மிடிவில் துணை செயலாளர் சிவசீலன நன்றி கூறினார்.