பொன்மனையில் மதுக்கடையை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பொன்மனையில் மதுக்கடையை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குலசேகரம்,
பொன்மனையில் மதுக்கடையை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட முள்ளம்வானி என்ற இடத்தில் பாருடன் கூடிய தனியார் மதுக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் மதுக்கடையை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் பொன்மனை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர் ஜாஸ்மினி வரவேற்று பேசினார். கவுன்சிலர் சாந்தி, அ.தி.மு.க. பேரூர் செயலாளர் மோகன் குமார், தி.மு.க. பேரூர் செயலாளர் சேம் பென்னட் சதீஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜாண் போஸ்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிரசாத், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சீலன், சர்வேஸ்வரி மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மதுக்கடையை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.