பாலப்பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


பாலப்பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x

இரவிபுதூர்-நல்லூர் பாலப்பணியை விரைந்து முடிக்கக்கோரி ஊராட்சி அலுலகம் முன் பொதுமக்கள் தா்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்:

இரவிபுதூர்-நல்லூர் பாலப்பணியை விரைந்து முடிக்கக்கோரி ஊராட்சி அலுலகம் முன் பொதுமக்கள் தா்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

முடங்கிய பாலப்பணி

இரவிபுதூரில் இருந்து நல்லூா் செல்லும் சாலையில் சேதமடைந்த பாலம் இடிக்கப்பட்டு ரூ.99.58 லட்சத்தில் புதிய பாலப்பணிகள் நடைபெற்று வந்தது. இதனால், நாகர்கோவிலில் சுசீந்திரம், நல்லூர் வழியா இரவிபுதூருக்கு இயக்கப்பட்ட பஸ்கள் பாலப்பணி காரணமாக மாற்று பாதை வழியாக மருங்கூருக்கு இயக்கப்பட்டு வந்தது. இதனால், இரவிபுதூர் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து பஸ்சை இரவிபுதூர் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. பேசியதை தொடர்ந்து பள்ளி நேரங்களில் இரவிபுதூருக்கு பஸ் இயக்கப்பட்டது. இதற்கிடையே பாலப்பணிகள் தொடங்கி 3 மாதங்கள் ஆகியும் முடங்கி கிடந்தது.

தர்ணா போராட்டம்

இதனால், ஆத்திரமடைந்த இரவிபுதூர், நல்லூர் பொதுமக்கள் நேற்று காலையில் ஒன்று திரண்டு பாலப்பணிகள் நடைபெறாததை கண்டுத்து இரவிபுதூர் ஊராட்சி அலுவலகம் அருகில் சாலையோரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் தர்ணாவில் கலந்து கொண்டு பேசினார்.

பேச்சுவார்த்தை

இதையறிந்த சப்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எம்.எல்.ஏ.வை போன்மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அதிகாரிகள் 1 மாதத்திற்குள் பாலப்பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளித்தனர். அதிகாரிகள் கூறியதை பொதுமக்களிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதையடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெசிம், மாவட்ட கவுன்சிலர் நீலபெருமாள், மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன், இரவிபுதூர் ஊராட்சி தலைவி தேவி பெருமாள், மருங்கூர் பேரூர் செயலாளர் சீனிவாசன், அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன், நிர்வாகிகள் செல்லம்பிள்ளை, தம்பி தங்கம், சந்திரசேகரன், கண்ணன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story