பொதுமக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரியில் சீராக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் சீராக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையை அடுத்துள்ள பெரியமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகராஜபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதே ஊராட்சியில் இருந்து 4 மோட்டார்கள் அமைத்து மற்ற ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் நிலையில் நாகராஜபுரம் பகுதிக்கு மட்டும் தண்ணீர் வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்க கோரியும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளை கண்டித்து கே.ஆர்.பி. அணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்ததும் கே.ஆர்.பி. அணை போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உடனடியாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜல்ஜீவன் திட்ட குடிநீர் குழாய் பணிகள் மாலைக்குள் முடிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.