சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதி


சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதி
x

சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேலூர்

காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே ஸ்டேட் பேங்க் காலனி உள்ளது. இங்குள்ள சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், கடந்த வாரம் சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளம் பாதாள சாக்கடை பணிகளுக்கா அல்லது வேறு எந்த பணிகளுக்காக தோண்டப்பட்டது என தெரியவில்லை. இதுவரை பள்ளம் மூடப்படவில்லை. பள்ளத்தில் பைப் லைன் புதைக்கப்படவில்லை. இதனால் நாங்கள் வீடுகளில் இருந்து வாகனங்களை வெளியே எடுத்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story