புள்ளம்பாடி ஒன்றியக்குழு கூட்டம்

புள்ளம்பாடி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி
புள்ளம்பாடி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் அதன் தலைவர் ரசியாகோல்டன்ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. .வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் கனகராஜ் வரவேற்று பேசினார். தீர்மான அறிக்கையை அலுவலர் முருகேசன் வாசித்தார். கூட்டத்தில் பொது செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துணைவட்டாரவளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story